Buy 1 Year Membership for ₹ 1500/- and get access to all the E-Books and download as many E-Books as you like.
Become a Members
Become a Members
Already a member? Log in here

தான் நரகத்தை அடைந்தாலும் சரி, இந்த கலியுகத்திலே அனைவரும் உய்ய வேண்டும் என்ற பெரும் அவாவினால் தனது குருவினுடைய ஆணையையும் மீறி, எல்லா நலன்களையும் வழங்க வல்ல ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோவில் மதில்மேல் ஏறி நின்று உபதேசித்த பேரருளாளர் ஸ்ரீ இராமானுஜர் ஆவார். வைணவ சம்பிரதாயத்தின் விசிஷ்டாத்வைதக் கொள்கையைப் பாரெங்கும் பரப்பிய பெருந்தகையும் இவரே. இளையபெருமாள், எம்பெருமானார், யதிராஜர், உடையவர், பாஷ்யக்காரர், கோவில் அண்ணன், திருப்பாவை ஜீயர் என்றும் பல்வேறு திருநாமங்களால் அறியப்படுகிறார்.